Realme இஸ் பேக்.. ஆர்டர் அடி வெளுக்குது.. புதுசு வருதுனு பழைய போன் மீது ரூ.7800 விலை குறைப்பு.. எந்த மாடல்?
பேக் டூ பேக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. அடுத்த வாரம் (மார்ச் 19) ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ள நிலைப்பாட்டில் அடுத்த மாதம் இன்னொரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. அது ரியல்மி 14 5ஜி (Realme 14 5G) ஸ்மார்ட்போனாகும். இது ரியல்மி பி3 5ஜி மாடலுடன் வட வடிவமைப்பு ஒற்றுமைகளை பகிர்ந்துகொள்ளும் என்பது போல் தெரிகிறது. ஆகையால் இரண்டில் ஒன்று தான் ஹிட் ஆகும்!

இதற்கிடையில் புதிய ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன்களின் வருகையை ஒட்டி, பழைய ரியல்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் மீது அபாரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரியல்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் (8ஜிபி + 128ஜிபி) ஆனது 35% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.21,999 க்கு பதிலாக ரூ.14,199 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 13 5ஜி அம்சங்கள் (Realme 13 5G Specifications): இது ரியல்மி 13 சீரீஸில் உள்ள பிளஸ் வேரியண்ட்டை விட சற்று உயரமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இது 45W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Realme UI இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 கலர் ஆப்ஷன்களில் டார்க் பர்பிள் மற்றும் ஸ்பீட் கிரீன் வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 13 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Realme 13 Plus 5G Specifications): இது 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவும் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இது 80W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Realme UI இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது - டார்க் பர்பிள், ஸ்பீட் கிரீன் மற்றும் விக்டரி கோல்ட்.
அதாவது இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஒரே வடிவமைப்பை கொண்டிருந்தாலும் கூட வெவ்வேறு சிப்செட்களை பேக் செய்கின்றன. பேஸிக் வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது மற்றும் பிளஸ் வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
அடுத்த மாதம் வரும் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 120Hz AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட்
- ஃபிளாஷ் மற்றும் ஒரு ரிங் எல்இடி ஃபிளாஷ் உடனான டூயல் ரியர் கேமரா
- 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் இரண்டாம் நிலை சென்சார்
- 45W பாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








