Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய ரியல்மி பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் ரியல்மி 13 4ஜி (Realme 13 4G) களமிறங்கி இருக்கிறது. இந்த ரியல்மியின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 13 4ஜி அம்சங்கள் (Realme 13 4G Specifications): இந்த போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 2,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே மாடல்!

மேலும், ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch), ஏஐ புரொடெக்டிவ் ஃபிலிம் டச் (AI Protective Flim Touch), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), ஏஐ டூயல் லைட்ஸ் சென்சார் (AI Dual Lights Sensor) சப்போர்ட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. போர்ட்ராய்டு போட்டோகிராபி மற்றும் நைட் போட்டோகிராபிக்கான பீச்சர்கள் இந்த சோனி சென்சார் கேமராவில் வருகின்றன.

இந்த ரியல்மி 13 4ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 எஸ்ஓசி (Octa Core Snapdragon 685 SoC) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக ஜிடி மோட் (GT Mode) இடம் பெற்றுள்ளது. ஆகவே, மிட்-ரேஞ்ச் கேமிங் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) வருகிறது. இந்த ரியல்மியில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல்) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்பும் பேட்டரி சிஸ்டம் வருகிறது.

ஆகவே, 67W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVooc Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 47 நிமிடங்களில் 0-100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல 19 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது.

இந்த போன் 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வருகிறது. டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் உள்ளது.

இந்த போனின் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,700 ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,708ஆகவும் இருக்கிறது. ஸ்கைலைன் ப்ளூ (Skyline Blue) மற்றும் ஃபைனர் கிரீன் (Pioneer Green) கலர்களில் வருகிறது. இந்தோனேசியாவில் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்தியாவில் வெளியாகும்.

Best Mobiles in India

English summary
Realme 13 4G With 50MP Camera 8GB RAM 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X