ஆகஸ்ட் 7-ல் இன்னொரு புது போன்.. பேக்-டூ-பேக் புதிய ஸ்மார்ட்போன்களை இறக்கும் Realme நிறுவனம்.. என்ன மாடல்?
இந்தியாவில் ரியல்மி 13 ப்ரோ சீரீஸ் (Realme 13 Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, ரியல்மி நிறுவனம் நான்-ப்ரோ (Non-Pro) மாடலான ரியல்மி 13 (Realme 13) ஸ்மார்ட்போனின் இந்தோனேசிய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. இது கூடிய விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரியல்மி 12 (Realme 12) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 13 ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரியல்மி 13 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு யூட்யூப் (YouTube) உட்பட ரியல்மி இந்தோனேசியாவின் சமூக ஊடக சேனல்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீம் (Live Stream) செய்யப்படும் என்பதால், இந்தியாவில் உள்ளவர்களும் இந்நிகழ்வை பார்க்கலாம்; ரியல்மி 13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை பற்றி முன்பே அறிந்துகொள்ளலாம்.

ரியல்மி 13 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி மாடலாக வருமா அல்லது 5ஜி மாடலாக வருமா என்கிற சந்தேகதிற்குமுற்றுப்புள்ளி வைப்பது இதன் சிப்செட் தான். ரியல்மி 13 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 4ஜி சிப்செட் ஆகும். இருப்பினும், இதே ஸ்மார்ட்போனின் 5ஜி மாடல் வெளியாகும் என்றும் தோன்றுகிறது, ஏனெனில் அது சமீபத்தில் TENAA-வில் இருந்து சான்றிதழை பெற்றுள்ளது.
இந்தியாவில் 4ஜி மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா அல்லது 5ஜி மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா அல்லது சாம்சங் நிறுவனத்தை போல ஒரே ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களை போல ரியல்மி 13 4ஜி மற்றும் ரியல்மி 13 5ஜி ஆகிய இரண்டுமே அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தெளிவு இல்லை.
ரியல்மி 13 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், விர்ச்சுவல் ரேம் வழியாக மொத்தம் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5 ஓஎஸ், 120Hz AMOLED டிஸ்பிளே, 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்றவைகளை எதிர்பார்க்கலாம்.
ரியல்மி 13 என்ன விலைக்கு வரும்? ரியல்மி 13 ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட்டின் விலை குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் ரியல்மி 13 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.16,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.29,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.31,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு கிரீன் மற்றும் மோனெட் கோல்டு கலர்களில் வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.23,999 க்கு, 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.25,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு க்ரீன், மோனெட் பர்பில் மற்றும் மோனெட் கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும். இரண்டுமே ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் இந்தோனேசிய சந்தைக்கான ரியல்மி பட்ஸ் டி01 (Realme Buds T01) இயர்போன்களும் வெளியிடப்படும். இந்த இயர்பட்ஸ் IPX4 ஸ்பிளாஷ்-ப்ரூஃப், 28 மணிநேரம் வரை பிளே டைம்,ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, கூகுள் பாஸ்ட் பேர் (Google Fast Pair), போன்ற அம்சங்கள் இடம்பெறும். இது ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








