Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. ரூ.16,151 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ரூ.16,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் ரியல்மி 12எக்ஸ் (Realme 12X) போன் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விலை, விற்பனை விவரங்கள் இதோ.

ரியல்மி 12எக்ஸ் அம்சங்கள் (Realme 12X Specifications): இந்த ரியல்மியில் 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு வாட்டர் டச் (Water Touch) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சப்போர்ட் உள்ளது.

ரூ.16,151 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (micro SD Card) சிலாட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. 7.89 மிமீ தடிமன் மற்றும் 190 கிராம் எடையில் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) பீச்சர் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி 12எக்ஸ் போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

ரூ.16,151 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி 12எக்ஸ் போனில் ப்ளூ பேர்ட் (Blue Bird) மற்றும் பிளாக் ஜேட் (Black Jade) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு லைட் லெதர் டிசைனில் (Light Feather Design) பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த போனின் விலையானது, நம்ப முடியாத வகையில் கம்மியான பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,151ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,460 ஆக இருக்கிறது. இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு வருகிறது.

இந்த விற்பனைக்கு பிறகு அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, ரியல்மி 12 ப்ரோ மற்றும் 12 சீரிஸ் போன்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றன. இப்போது, அந்த போன்களைவிட கம்மியான பட்ஜெட்டில் இந்த போன் வெளியாக இருப்பதால், அதிக வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12X With 12GB RAM, 50MP Camara Launched Sale From April 1 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X