ஆர்டருக்கு மேல் ஆர்டர்.. ரூ.11,599-க்கு 16GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் ஆர்டருக்கு மேல் ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலையில் 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், விசி கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் டைமன்சிட்டி 6100+ சிப்செட்டுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12x 5G) கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொண்ட இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 12x 5G Specifications): இந்த ரியல்மி போன் பட்ஜெட்டில் கிடைத்தாலும், பிரீமியம் வாட்ச் டிசைன் பேனலுடன் ட்வைலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் உட்லேண்ட் கிரீன் (Woodland Green) கலர்களில் கிடைக்கிறது. 3டி டைமண்ட் பேட்டர்ன் டெக்சரில் டிரெண்ட் லுக் கொடுக்கிறது. பஞ்ச்-ஹோல் பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது.

6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனல் வருகிறது. ஆனால், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே மற்றும் பக்கா பீச்சர்கள் கிடைக்கிறது.
இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும்படியான ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Octa Core 6nm MediaTek Dimensity 6100+) சிப்செட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி போனில் மினி கேப்சூல் (Mini Capsule), ஏர் கெஸ்ச்சர் (Air Gestures) போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பீச்சர்களும் கிடைக்கின்றன. சினிமாடிக் ஃபில்டர்களுடன் (Cinematic Filters) 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பிளாக் & ஒயிட் கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) கிடைக்கிறது. 8 எம்பி இன்-டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது.
மூன்று ரேம் வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதில், 8 ஜிபி ரேம் மாடலுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி போனில் கூடுதல் மெமரிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் டைனாமிக் பட்டன் (Dynamic Button) கிடைக்கிறது. அதேபோல டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), ஹைரெஸ் ஆடியோ (HiRes Audio) வருகிறது.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி விலை (Realme 12x 5G Price): இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13499 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது. இதில் ரூ.1900 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வெறும் ரூ.11,599 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








