தூக்கி பாக்கெட்ல போடலாம்.. ரூ.16,000 போதும்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஏப்ரல் 1 வருது!
ஒட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் மிரளும்படியான விலையில் டைனாமிக் பட்டன், ஏர் கெஸ்ச்சர், 45W சார்ஜிங், 50 எம்பி கேமரா, டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் போன்ற பீச்சர்களுடன் அட்டகாசமான டிசைனில் ரியல்மி 12எக்ஸ் (Realme 12X) போன் வெளியாகிறது.
ஏப்ரல் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 45W சூப்பர்வூக் சார்ஜிங், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6என்எம் 5ஜி சிப்செட், டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட போன்கள் செக்மெண்ட்டில் கம்மியான விலையில் இந்த போன் விற்பனைக்கு வர இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் மைக்ரோசைட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் 5ஜி (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm 5G) சிப்செட், 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, கலர் மற்றும் டிசைன் ஆகிய அம்சங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனின் சீன வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அங்கு ஏர்பல் 1ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அதே நாளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதால் அந்த போனின் விலை மற்றும் பீச்சர்களே இந்திய வேரியண்ட்டில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதை இப்போது பார்ப்போம்.
ரியல்மி 12எக்ஸ் அம்சங்கள் (Realme 12X Specifications): இந்த போனில் டைமன்சிட்டி சிப்செட் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. அதோடு ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

இதில் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் வாட்டர் டச் (Water Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) பீச்சர் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (micro SD Card) சப்போர்ட் வருகிறது. இருப்பினும், இந்திய வேரியண்ட்டில் 8 ஜிபி ரேம் மாடல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டுள்ளது.
பிளாக் ஜேட் (Black Jade), ப்ளூ பேர்ட் (Blue Bird) ஆகிய 2 கலர் வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்திய வேரியண்ட்டில் கலர் வேறுபாடு இருக்கிறது. சீனாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,151ஆக உள்ளது. ஆகவே, இந்தியாவிலும் அதே பட்ஜெட்டில் வெளியாகலாம்.
அதே நேரத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியானால், ரூ.16,000 பட்ஜெட்டுக்குள் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் கிடைக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் பக்கா 5ஜி போன் கிடைப்பதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








