Home
Mobile

சம்பவம் இருக்கு! 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்போனை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது. இதே புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சம்பவம் இருக்கு! இந்தியாவுக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்..

ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 12x 5G specifications): சீனாவில் 15 சார்ஜிங் வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் ஃபேஸ் அன்லாக் (face unlock) ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்தியாவுக்கு வரும் இந்த ரியல்மி போன்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போனில் 12ஜிபி விர்ச்சுவல் ரேம் கூட உள்ளது. இதுதவிர நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மறறும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது அசத்தலான ஸ்மார்ட்போன்.

சம்பவம் இருக்கு! இந்தியாவுக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்..

6.67-இனச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் இந்தியாவுக்கு வரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.2, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்தியாவில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12x 5G will be launched in India soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X