Home
Mobile

கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வசதி, 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

இந்நிலையில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் இந்தியாவில் ரூ.12,000 விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்

ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள் ( Realme 12x 5G specifications): 6.67-இனச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ SoC) வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள (Android 14 OS) வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் ஃபேஸ் அன்லாக் (face unlock) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.2, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். குறிப்பாக ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன் ஆனது கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12x 5G will be launched in India at price of Rs.12000: check launch date, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X