குவியுது ஆர்டர்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. கம்மி விலையில் ரியல்மி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் 50எம்பி கேமரா, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 12x 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனை நம்பி வாங்கலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனக்கு இரண்டு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant)) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த போனின் எடை 188 கிராம் ஆகும்.
5000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடம் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. ட்விலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 விலையிலும் வாங்க முடியும். இந்த போனின் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு பிளிப்கார்ட் ( Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் மூலம் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








