யோசிக்காம ஆர்டர் போட்ருங்க.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. கம்மி விலையில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்திய இணையதளத்தில் வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

ரியல்மி 12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 12x 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். மேலும் இந்த போனின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ், டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடம் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் எடை 188 கிராம் ஆகும்.
ட்விலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green)நிறங்களில் இந்த ரியல்மி 12எக்ஸ் 5ஜி போனை வாங்க முடியும். மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications