Home
Mobile

மார்கெட் காலி.. ரியல்மி 12 ப்ரோ ஆட்டமே அதிருது.. இப்போ அதைவிட கம்மி பட்ஜெட்ல அடுத்த போன்!

இந்திய மார்கெட்டில் ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro), ரியல்மி 12 ப்ரோ பிளஸ் (Realme 12 Pro Plus) போன்களானது, ப்ரீ-ஆர்டரில் மிரளவிட்டுவரும் வேளையில், ரியல்மி 12 (Realme 12) போனின் வெளியீட்டு விவரங்கள் கசிந்திருக்கிறது. விவரம் இதோ.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் (Realme 12 Pro Series) போன்கள் ஜனவரி 29ஆம் தேதி இந்தியாவில் வெளியாகின. பிப்ரவரி 6ஆம் தேதி அந்த போன்களின் ஓப்பன் சேல் தொடங்குகிறது. இருப்பினும், ப்ரீ-ஆர்டரில் இதுவரையில் வெளியான ரியல்மி போன்களின் விற்பனையை முறியடித்துள்ளது.

ரியல்மி 12 ப்ரோ ஆட்டமே அதிருது.. இப்போ அதைவிட கம்மி பட்ஜெட்ல போனா?

ஏனென்றால், வெறும் ரூ.25,000 பட்ஜெட்டில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருவதால், அந்த போன்களுக்கான வரவேற்பு மிகப்பெரும் அளவில் இருக்கிறது. ஓப்பன் சேலுக்கு பிறகும் விற்பனையில் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சீனாவில் ரியல்மி 12 போன் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த ரியல்மி 12 மாடலானது, சீனாவின் டீன்னா (TENNA) மற்றும் எம்ஐஐடி (MIIT) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சர்டிபிகேஷனுக்கு பிறகு அந்த போனின் வெளியீட்டு விவரம் மற்றும் முக்கிய அம்சங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

ரியல்மி 12 அம்சங்கள் (Realme 12 Specifications): இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி (Octa Core MediaTek Dimensity 7050 SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5 (realme UI 5) சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டுள்ளது. இந்த ரியல்மியில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் வருகிறது.

அதோடு டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டிருக்கிறது. இந்த ரியர்மி 12 போனில் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியோடு 7.87 தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இதுவொரு 5ஜி வேரியண்ட்டாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. அதோடு வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி ஆகிய சப்போர்ட்டும் கொண்டுள்ளது.

இந்த போன் சீனாவில் பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் வெளியாகி இருப்பதால், மார்ச் அல்லது ஏப்ரலில் இந்திய வெளியீடு இருக்கலாம். இந்த போனின் பட்ஜெட் ரூ.20,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 With AMOLED Display, Dimensity 7050 SoC Tipped To Launch in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X