Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 64MP கேமரா.. Snapdragon 6 Gen 1.. புதிய ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் அசத்தலான இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அட்டகாசமான வடிவமைப்பும் மற்றும் அருமையான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான ரியல்மி 12 ப்ரோ அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. புதிய ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்

ரியல்மி 12 ப்ரோ அம்சங்கள் (Realme 12 Pro specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

64எம்பி பெரிஸ்கோப் கேமரா (periscope camera) + 32எம்பி டெலிபோட்டோ கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1(Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டால்பி ஆடியோ ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. புதிய ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்

குறிப்பாக ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro with Snapdragon 6 Gen 1 chipset will be launched soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X