மிரட்ட வருகிறது.. வெறும் ரூ.24,000 போதும்.. 64MP பெரிஸ்கோப்.. OV சென்சார்.. 3X ஆப்டிகல் ஜூமிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக கம்மி பட்ஜெட்டில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, ஆப்டிகல் ஜூமிங், ஓம்னிவிஷன் சென்சார் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ரியல்மி 12 சீரிஸ் (Realme 12 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ரியல்மி 12 ப்ரோ, ரியல்மி 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 12 Pro, Realme 12 Pro Plus Specification): இந்த போன்கள் கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளன. அதாவது, ரியல்மி 12 ப்ரோ மாடலில் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் (2x Optical Zoom) சப்போர்ட் வருகிறது. அதேபோல ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த 2 மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை ரியல்மி நிறுவனமே உறுதி செய்துள்ளதால், அந்த பிராண்ட் பிரியர்கள் குஷியில் இருக்கின்றனர். ஏனென்றால், இந்த ரியல்மி 12 சீரிஸ் மாடல்களின் ஆரம்ப விலையானது, வெறும் ரூ.24,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
இதனால் அந்த மாடல்களுக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரும் அளவில் இருக்கிறது. இந்த போன்களின் மற்ற அம்சங்கள் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்ப்போம்.
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 11 Pro+ Specifications): இந்த போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டுள்ளது.

இந்த போனில் மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகியவை வருகின்றன. இந்த ரியல்மி போனில் சாம்சங் எச்பி3 சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல சோனி சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் மிரள வைக்கிறது. அதாவது, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த போன் ஆஸ்ட்ரல் பிளாக், ஒயாசிஸ் கிரீன் மற்றும் சன்ரைஸ் பீஜ் ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி + 128 மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.27,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையோடு சற்று கூடுதல் விலையில் ரியல்மி 12 சீரிஸ் மாடல்கள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. இந்த போன்கள் டிசம்பரில் வெளியாகின்றன. முதலில் சீனாவில் அடுத்து மற்ற நாடுகளிள் அறிமுகம் செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications