ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.24000 பட்ஜெட்.. பெரிஸ்கோப் கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் முதல் முறையாக ரூ.24,000 பட்ஜெட்டில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவுடன் வெளியாகி மார்கெட்டை அதிர வைத்த ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) மற்றும் ரியல்மி ப்ரோ பிளஸ் (Realme 12 Pro Plus) போன்களின் விற்பனை தொடங்கி விட்டது.
ரியல்மி 12 ப்ரோ, ப்ரோ பிளஸ் விலை (Realme 12 Pro, Pro Plus Price): ரியல்மி 12 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

அதேபோல ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும் இருக்கிறது.
இந்த போனுக்கும் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, ரியல்மி 12 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வெறும் ரூ.23,999 பட்ஜெட்டிலும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.27,999 பட்ஜெட்டிலும் வாங்கிகொள்ளலாம்.
ரியல்மி 12 ப்ரோ, 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 12 Pro, 12 Pro Plus Specifications): இந்த ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ப்ரோ பிளஸ் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் சிப்செட் வருகிறது.
அதோபோல அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சப்போர்ட் கொண்டுள்ளன. இந்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ்களில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ரியல்மி 12 ப்ரோ போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ் 709 (Sony IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
அதோடு ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சார் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன்களில் 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த 2 வேரியண்ட்களிலும் சப்மெரின் ப்ளூ (Submarine Blue) மற்றும் நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போன்களை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி (Realme) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








