Home
Mobile

மார்க்கெட் மிரளும்.. சோனி கேமரா.. 256GB மெமரி..Snapdragon 7 Gen 3.. வருகிறது ரியல்மி போன்கள்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை தான் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக இந்த புதிய ரியல்மி போன்கள் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் போன்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கெட் மிரளும்.. சோனி கேமரா.. வருகிறது ரியல்மி போன்கள்..

ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 chipset ) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன்கள் அறிமுகமாகும்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் ரியல்மி 12 ப்ரோ சீரிஸ்.

ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 டெலிபோட்டோ சென்சார் (Sony IMX709 telephoto sensor) உட்பட மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. அதேசமயம் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 64எம்பி ஓம்னிவிஷன் OV64B பெரிஸ்கோப் (64-megapixel OmniVision OV64B periscope) டெலிபோட்டோ சென்சார்ட் உட்பட மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் இருக்கும் என்று தெரிவிக்;கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளன இந்த ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள்.

மார்க்கெட் மிரளும்.. சோனி கேமரா.. வருகிறது ரியல்மி போன்கள்..

குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் இந்த போன்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன்கள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.25,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro series will be launched in India soon: check out leaked price and specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X