விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல பெரிஸ்கோப் கேமரா.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே அதிரும்படி ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் (Realme 12 Pro Series) போன்களின் விற்பனையானது, பாஸ்டஸ்ட் சேல்ஸ் ரெக்கார்ட் (Fastest Sales Record) செய்துள்ளது. இவ்வளவு பெரிய வரவேற்பு பெற அந்த போன்களின் டெலிபோட்டோ கேமராவே காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, எர்லி அக்சஸ் விற்பனை (Early Access Sale) பிரீயட்டில் அதிவேகமாக ஆர்டர் செய்யப்பட்ட போன்களாக ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் சாதனை படைத்துள்ளது. இந்த போன்களின் ஓப்பன் சேல் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கிறது. இருப்பினும், ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.

ரியல்மி 12 ப்ரோ, 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 12 Pro, 12 Pro Plus Specifications): இந்த போன்களில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ரியல்மி 12 ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதேபோல ப்ரோ பிளஸ் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது. ரியல்மி 12 ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் வருகிறது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ் 709 (Sony IMX709) சென்சாருடன் 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் சோனி சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் IP65 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சப்மெரின் ப்ளூ மற்றும் நேவிகேட்டர் பீஜ் கலர்களில் கிடைக்கிறது. ப்ரோ பிளஸ் போனில் கூடுதலாக எக்ஸ்ப்ளோரர் ரெட் கலர் கிடைக்கிறது. ரியல்மி 12 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது.
அதேபோல ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1500க்கும் மேலான டிஸ்கவுண்ட்டுடன் ப்ரீ-ஆர்டர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போன்களை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி தளங்களில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








