Home
Mobile

அதிரவிடும் விலை.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. அறிமுகமானது ரியல்மி போன்கள்.. எந்த மாடல்?

ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு போன்களும் தரமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த ரியல்மி போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை தேதி குறித்த தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 12 ப்ரோ அம்சங்கள் (Realme 12 Pro Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 12 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) போன்ற டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது ரியல்மி போன்கள்.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத வசதியுடன் ரியல்மி 12 ப்ரோ வெளிவந்துள்ளது. ஐபி 65 ரேட்டிங் மற்றும் 3D வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி சோனி ஐஎம்எஸ்882 மெயின் கேமரா + 32எம்பி சோனி ஐஎம்எஎக்ஸ்709 டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ. அதேபோல் 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ போன்.

ரியல்மி 12 ப்ரோ விலை: சப்மரைன் ப்ளூ (Submarine Blue), நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige), எக்ஸ்ப்ளோரர் ரெட் (Explorer Red) நிறங்களில் இந்த ரியல்மி 12 ப்ரோ போன் கிடைக்கும். 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 ப்ரோ போனை ரூ.25,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.26,999 விலையிலும் வாங்க முடியும்.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 12 Pro+ Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) போன்ற டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

ஆக்டோ-கோர்ட் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத வசதியுடன் ரியல்மி 12 ப்ரோ வெளிவந்துள்ளது. ஐபி65 ரேட்டிங் மற்றும் 3D வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி சோனி ஐஎம்எஸ்890 மெயின் கேமரா + 32எம்பி OV64B பெரிஸ்கோப் லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ பிளஸ். அதேபோல் 32எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போன்.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது ரியல்மி போன்கள்.. எந்த மாடல்?

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் விலை: சப்மரைன் ப்ளூ (Submarine Blue), நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige), எக்ஸ்ப்ளோரர் ரெட் (Explorer Red)நிறங்களில் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போன் கிடைக்கும். 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனை ரூ.29,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.31,999 விலையிலும் வாங்க முடியும். கடைசியாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலை ரூ.33,999 விலையில் வாங்க முடியும்.

இந்த இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போன்களின் எர்லி அக்சஸ் சேல் (Early Access Sale) நிறுவனத்தின் இணையதளத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro series launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X