Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 64எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. 2 ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் (Realme 12 Pro+) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு போன்களும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிருது இந்திய மார்க்கெட்.. 2 ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 12 Pro plus specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்ட ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்.

50எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்80 கேமரா + 64எம்பி OmniVision OV64B பெரிஸ்கோப் லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. 2 ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மேலும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro series India launch date revealed: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X