Home
Mobile

வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்! Realme-யின் ரியல் ஹீரோ.. 120x சூப்பர் ஜூம்.. ஆளுக்கு 1 ஆர்டர் போடுற விலை!

அட்டகாசமான அம்சங்கள், சுண்டி இழுக்கும் விலையின் கீழ் 2 புதிய ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரீஸ் (Realme 12 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 12 ப்ரோ 5ஜி (Realme 12 Pro 5G) மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 12 Pro Plus 5G) வெளியாகும்.

Realme-யின் ரியல் ஹீரோ.. 120x சூப்பர் ஜூம்.. என்ன மாடல்?

எப்போது அறிமுகமாகும்? ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரீஸ் ஆனது ஜனவரி 29 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் வரும் 2 மாடல்களுமே 64எம்பி ஆம்னிவிஷன் ஓவி64பி பெரிஸ்கோப் லென்ஸை ( 64MP OmniVision OV64B Periscope Lens) கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சென்சார் 1/2-இன்ச் அளவை கொண்டிருக்கும். இது மற்ற நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 1/2.52 இமேஜ் சென்சாரை விட சென்சார் 27.62 சதவீதம் பெரியது என்று ரியல்மி கூறுகிறது. மேலும் இவ்விரு மாடல்களில் ஒன்று ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் உடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme-யின் ரியல் ஹீரோ.. 120x சூப்பர் ஜூம்.. என்ன மாடல்?

ப்ராசஸரை பொறுத்தவரை ப்ரோ மாடலானது (ரியல்மி 12 ப்ரோ) குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) உடன் வரும் என்றும், ப்ரோ பிளஸ் மாடலானது (ரியல்மி 12 ப்ரோ பிளஸ்) ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, இரண்டு மாடல்களும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் கர்வ்டு எஜ்ட் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேக்கள் இடம்பெறலாம்.

Realme-யின் ரியல் ஹீரோ.. 120x சூப்பர் ஜூம்.. என்ன மாடல்?

ரியல்மி 12 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி உடன் சேர்த்து இந்த சீரீஸின் கீழ் மூன்றாவது மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். அது ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் (Realme 12 Pro Max) என்று அழைக்கப்படலாம்.

ப்ரோ மேக்ஸ் மாடலில் 64MP OIS போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 50MP சோனி IMX890 OIS கேமரா சென்சார் இடம்பெறலாம். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 உடன் வரலாம். கடைசியாக இது ரோலக்ஸ் வாட்ச்சால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பை பெறலாம் அல்லது ஒரு ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம்.

ரியல்மி 12 ப்ரோ சீரீஸ் என்ன விலைக்கு வரும்? இந்த சீரிஸின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்கள்,முறையே ரூ.33,999 மற்றும் ரூ.35,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

ஆக ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் இன்னும் குறைவாக இருக்கலாம். இன்னும் சரியான சொல்ல வேண்டுமென்றால், ரியல்மி 12 ப்ரோ ஆனது ரூ.25,000 க்குள்ளும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஆனது ரூ.30,000 க்குள்ளும் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Realme 12 Pro Realme 12 Pro Plus Realme 12 Pro Max Price Specifications India Launch on Jan 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X