மிரளுது பிளிப்கார்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 120X ஜூமிங்.. 24GB ரேம்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களும் மிரளும்படியான பட்ஜெட்டில் பெரிஸ்கோப் கேமரா, 3டி டிஸ்பிளே, 24ஜிபி ரேம், 67W சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் எக்ஸ்ப்ளோரர் ரெட் (Realme 12 Pro+ Explorer Red) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி 12 ப்ரோ பிளஸ் எக்ஸ்ப்ளோரர் ரெட் அம்சங்கள் (Realme 12 Pro Plus Explorer Red Specifications): இந்த ரியல்மியில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் இருக்கின்றன.
அதோடு 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது. இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் எக்ஸ்ப்ளோரர் ரெட் போனில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
அதோடு ஓம்னிவிஷன் ஓவி648 (Omnivision OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல சோனி சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
இந்த ரியல்மியில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. IP65 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
டைப்-சி ஆடியோ (Type-C Audio) கேபிள் சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் எக்ஸ்ப்ளோரர் ரெட் போனில் 5000mAh பேட்டரி வருகிறது. 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, ரூ.2000 டிஸ்கவுண்ட்டுடன் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் (realme Online Store) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பெரிஸ்கோப் கேமரா வேண்டுமானால், இந்த ரியல்மி மாடலை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications