Home
Mobile

அதிர வைக்கும் விலை.. 64எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே..பிரமாண்டமான ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியலமி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரியல்மி 12 ப்ரோ 5ஜி, ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி, ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை பிளிப்கார்ட் தளம் மூலம் கசிந்துள்ளது. இதை குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதிர வைக்கும் விலை.. .பிரமாண்டமான ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்?

அதாவது 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.32,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.35,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Realme 12 Pro Max specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில் உள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்ட ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு அட்ரினோ 710 ஜிபியு(Adreno 710 GPU) உடன் உயர் திறன் கிராபிக்ஸ் அம்சத்தை ஆதரிக்கிறது ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்.

அதிர வைக்கும் விலை.. .பிரமாண்டமான ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்?

ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்890 கேமரா ( Sony IMX890 camera) + 64எம்பி OmniVision OV64B பெரிஸ்கோப் லென்ஸ் (periscope lens) + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் ( ultrawide sensor) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளன.

source: 91mobiles

photo courtesy: 91mobiles, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro Max price leaked online ahead of launch: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X