மிரள விடும் ரியல்மி.. 67W சார்ஜிங்.. 64MP கேமரா.. 512GB மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வரும் ஜனவரி 29-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் ரியல்மி 12 ப்ரோ போனின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
அதாவது ஏற்கனவே ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளிவந்த நிலையில், தற்போது தான் ரியல்மி 12 ப்ரோ முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இப்போது ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 12 ப்ரோ அம்சங்கள் (Realme 12 Pro specifications): 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் உள்ளது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்ட ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) உடன் உயர் திறன் கிராபிக்ஸ் அம்சத்தை ஆதரிக்கிறது ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி + 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்890 கேமரா ( Sony IMX890 camera) + 64எம்பி OmniVision OV64B பெரிஸ்கோப் லென்ஸ் (periscope lens) + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் ( ultrawide sensor) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








