Home
Mobile

மிரண்டு போவீங்க.. DSLR போர்ட்ராய்டு.. SONY சென்சார்.. OV டெலிபோட்டோ.. 120X ஜூமிங்.. எந்த மாடல்?

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவிலான கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ரியல்மி 12 ப்ரோ 5ஜி (Realme 12 Pro 5G) போனின் கேமரா அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. டிஎஸ்எல்ஆர் கிரேட் போர்ட்ராய்டு போட்டோக்களை கொடுக்கவிருக்கும் இந்த போனின் விவரங்கள் இதோ.

ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் (Realme 12 Pro Series) போன்கள் வரும் ஜனவரி 29ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகின்றன. இதில் ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் என்று 2 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. இந்த போன்களின் கேமராவே அதற்கான எதிர்பார்ப்பை விண்ணை முட்டும் அளவுக்கு தூக்கி விட்டுள்ளது.

 DSLR போர்ட்ராய்டு.. SONY சென்சார்.. OV டெலிபோட்டோ.. 120X ஜூமிங்!

ஏனென்றால், சினிமா-கிரேட் போர்ட்ராய்டு (Cinema-Grade Portrait) இந்த கேமராவில் கிடைக்கும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதற்கேற்ப 80மிமீ போகல் லென்த் (Focal Length), சோனி சென்சார், பிளாக்சிப் பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Flagship Periscope Telephoto) போன்ற அம்சங்களை கொடுத்து கேமரா பிரியர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது.

இந்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் போன்களின் வெளியீடு நெருங்கிவிட்டதால், அடுத்தடுத்த அம்சங்களை ரியல்மி நிறுவனம் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த போன்களில் பயன்படுத்தப்பட்ட சென்சார்களை இப்போது உறுதி செய்திருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ அம்சங்களோடு, ஏற்கனவே மார்கெட்டில் கசிந்த அம்சங்களையும் பார்ப்போம்.

ரியல்மி 12 ப்ரோ, ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 12 Pro, Pro Plus Specifications): ரியல்மி 12 ப்ரோ போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட மெயின் கேமராவுடன் டிரிபிள் ரியர் சிஸ்டம் வருகிறது. அதேபோல ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 1 SoC) சிப்செட் வருகிறது.

 DSLR போர்ட்ராய்டு.. SONY சென்சார்.. OV டெலிபோட்டோ.. 120X ஜூமிங்!

மறுப்பக்கம், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓவி64பி (OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவும் வருகிறது. இந்த போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் வருகிறது.

மேற்கூறிய அம்சங்களை மட்டுமே ரியல்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இப்போது, கசிந்த அம்சங்களை பார்ப்போம். இந்த 2 போன்களிலும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. ரியல்மி 12 ப்ரோ போனில் மெயின் கேமராவுக்கு அடுத்து 32 எம்பி டெலிபோட்டோ + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

அதேபோல, ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போனிலும் மெயின் மற்றும் டெலிபோட்டோவுக்கு அடுத்து 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதேபோல ப்ரோ மாடலில் 16 எம்பி செல்பீ கேமராவும், ப்ரோ பிளஸ் மாடலில் 32 எம்பி செல்பீ கேமராவும் வர இருக்கிறது. இந்த 2 மாடல்களிலும் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன்களில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போன்களின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டில் இருந்து ரூ.45,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro 5G With Sony IMX882 Primary Camera To Launch on January 29 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X