மார்ச் 15 காலி.. பட்ஜெட்ல 12GB ரேம்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கிய ரியல்மி 12 ப்ரோ போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்டின் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி சென்சார், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 67W சார்ஜிங் போன்ற அம்சங்களில் பின்னி எடுக்கிறது.
ரியல்மி 12 ப்ரோ அம்சங்கள் (Realme 12 Pro Specifications): இந்த ரியல்மி மாடலின் கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 32 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் (Telephoto Lens) வருகிறது. ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் வருகிறது. அதேபோல டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் வருகிறது. 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (4x Optical Zoom), 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவை போலவே டிஸ்பிளேவும் மிரளவிடும் விதமாக இருக்கிறது. 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) மாடலாகும். 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 1260Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இந்த ரியல்மி 12 ப்ரோ 5ஜி போனில் IP65 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (IP65 Dust & Splash Resistant) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி 12 ப்ரோ போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது.
வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல்-ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual-Frequency GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த ரியல்மி 12 ப்ரோ 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 28,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.24,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் விற்பனை வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அல்ட்ரா பீச்சர் கேமரா மட்டுமல்லாமல், பக்கா பர்ஃபாமென்ஸ் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








