Home
Mobile

Realme-கிட்ட இருந்து இப்படி ஒரு 5G Phone-ஆ.. Rolex எடிஷன், Omnivision கேமரா, 120x டிஜிட்டல் ZOOM.. என்ன விலை?

ரியல்மி நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போன்-ஆ என்று வாய்பிளக்க வைக்கும்படியான அம்சங்களுடன் 2 புதிய ப்ரோ மாடல்கள் இந்தியாயவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதென்ன மாடல்கள்? இந்த போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரீஸ் (Realme 12 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், இந்த சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமென்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme-கிட்ட இருந்து இப்படி ஒரு 5G Phone-ஆ.. Rolex எடிஷன்!

இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 12 ப்ரோ 5ஜி ( Realme 12 Pro 5G) மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 12 Pro Plus 5G) மாடல்கள் அறிமுகமாகும். அதாவது இவைகள் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) ஸ்மார்ட்போன்களின் தொடர்ச்சியாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களாக இருக்கும்.

ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரீஸில் ரோலெக்ஸ் எடிஷன் (Rolex Edition) என்கிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும். இதுகுறித்த டீஸர் புகைப்படத்தில், ரியல்மி 12 ப்ரோ மாடலானது ரோலெக்ஸ் வாட்சின் (Rolex Watch) ஆடம்பரமான வடிவமைப்பு கூறுகளை ஒருங்கிணைக்கும் என்பதும், அது ரோலக்ஸ் வாட்ச்சின் பிரபலமான ப்ளூ டயலை நினைவூட்டும் படியான ப்ளூ கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Realme-கிட்ட இருந்து இப்படி ஒரு 5G Phone-ஆ.. Rolex எடிஷன்!

கூடவே ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் பேக் பேனலில் கோல்ட் கலர் டயலால் சூழப்பட்ட சென்டர்டு சர்குலர் கேமரா யூனிட் இருக்கும் என்பதும், பேக் பேனலின் நடுவில் ஒரு கோல்ட் லைன் செங்குத்தாக செல்வதும், ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் உள்ள பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் ஆகியவைகளும் கோல்ட் கலரில் இருக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது சப்மெரைன் ப்ளூ கலரில் (Submarine Blue Colour) என்று அழைக்கப்படும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி 12 ப்ரோ சீரீஸில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization) ஆதரவு மற்றும் 24 மிமீ ஃபோக்கல் லெங்த் (24mm focal length) உடனான சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX890) மெயின் கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Realme-கிட்ட இருந்து இப்படி ஒரு 5G Phone-ஆ.. Rolex எடிஷன்!

மேலும் இதன் கேமரா செட்டப்பில் இது 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (120x Digital Zoom) வரையிலான ஆதரவை வழங்கும் ஓவி64பி பெரிஸ்கோப் கேமராவும் (OV64B Periscope Camera) இருக்கும். கூடவே இந்த கேமரா செட்டப்பால் 71மிமீ ஃபோக்கல் லெங்த் (71mm focal length) உடன் கூடிய 3எக்ஸ் போர்ட்ரெய்ட் மோடும் (3x Portrait Mode) இருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை, ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) இடம்பெறும். பொதுவான அம்சங்களை பொறுத்தவரை, இரண்டிலுமே 50எம்பி மெயின் கேமரா இருக்கும்; இரண்டு போன்களிலும் 5000mAh பேட்டரிகள் பேக் செய்யப்படும். முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, ப்ரோ பிளஸ் மாடலில் 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான 64-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் ஓவி64பி கேமரா இடம்பெற வர வாய்ப்புள்ளது.

என்ன விலைக்கு வரும்? ரியல்மி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும். மறுகையில் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.30,000 க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை விவரங்கள் வெளியீட்டு நாளன்று அறிவிக்கப்படும்.

சரியாக எப்போது அறிமுகமாகும்? தற்போது வரையிலாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ரியல்மி 12 ப்ரோ சீரீஸின் லேண்டிங் பேஜ் ஆனது ஜனவரி மாதம் வெளியாகும் என்று மட்டுமே குறிப்பிடுகிறது; சரியான வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை. இருப்பினும் இது ஜனவரி 31 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro 5G Series Rolex Edition Luxury Design Periscope Camera India Launch Date Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X