Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. ரூ.19,999 போதும்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் ரியல்மி போன்..

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12 பிளஸ் போனை இந்தியாவில் வரும் மார்ச் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் மலேசியாவில் இதே ரியல்மி 12 பிளஸ் போன் ஆனது பிப்ரவரி 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் இந்த ரியல்மி 12 பிளஸ் விலை குறித்த தகவலை வெளியிட்டார். மேலும் ஆன்லைனில் வெளியான ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

SONY கேமரா.. 120W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் ரியல்மி போன்..

ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள் (Realme 12 Plus Specifications): 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) பிளாட் எட்ஜ் டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 1800 × 2400 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7050 6nm SoC) சிப்செட் வசதியுடன் இந்தியாவுக்கு வரும் ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன். பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் ரியல்மி 12 பிளஸ் போனுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

12 ஜிபி ரேம் ( 12 ஜிபி டைனாமிக் ரேம்) + 256ஜிபி மெமரி வசதியுடன் ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

SONY கேமரா.. 120W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் ரியல்மி போன்..

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக வேகன் லெதர் (Vegan Leather) பேனல் டிசைன் கொண்டிருக்கிறது இந்த போன். இதுதவிர கிரீன் (Green) மற்றும் பெய்ஜ் (Beige) கலர் கொண்டிருக்கிறது இந்த ரியல்மி போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக 190 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போன். ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் (Realme 12 Pro Series) மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த ரியல்மி 12 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 12 plus India price leaked ahead of March 6 launch: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X