Home
Mobile

மார்கெட் மிரளுது.. பட்ஜெட்ல SONY கேமரா.. CINE பொக்கெ.. OIS சப்போர்ட்.. 24GB ரேம்.. எந்த மாடல்?

போர்ட்ராய்டு கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus) போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சோனி எல்ஓய்டி600 (Sony LYT600) சென்சாருடன் மிரளவிடும் இந்த போன் குறித்த விவரங்கள் இதோ.

மிட்-ரேஞ்ச் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் போன்கள் சோனி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் சென்சார்களுடன் கடந்த மாதம் வெளியாகின. ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளரான க்ளாடியோ மிராண்டாவுடன் கைகோர்த்து இமேஜ் என்ஹாண்ஸ்மென்ட் ஃபில்டர்களை ரியல்மி நிறுவனம், அந்த போன்களில் வழங்கியது.

SONY கேமரா.. CINE பொக்கெ.. OIS சப்போர்ட்.. 24GB ரேம்.. எந்த மாடல்?

இந்த பில்டர்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்றதால், அந்த போன்களின் விற்பனை இந்திய மார்கெட்டை மிரளவிட்டது. இப்போது, அதைவிட கம்மியான பட்ஜெட்டில் ரியல்மி 12 பிளஸ் போனில் அதேபோன்ற போர்ட்ராய்டு போட்டோகிராபி பில்டர்களை கொடுக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சோனி எல்ஓய்டி600 சென்சாருடன் இந்த போனை களமிறக்க இருக்கிறது.

இந்த சென்சாரானது, அதன் முந்தைய வெர்ஷன்களைவிட 18% சதவீதம் அட்வான்ஸ் கலர் ரீபுரொடெக்சன் என்ஹான்ஸ்மென்ட் கொண்டிருக்கிறது. 2X இன்-சென்சார் ஜூமிங் சப்போர்ட் கொண்டுள்ளது. ஸ்னாப் போர்ட்ராய்டு சிஸ்டம் (Snap Portrait System) கொண்டிருக்கிறது. இதன் மூலம் 0.8 செகண்ட்டில் அடுத்த ஸ்னாப் எடுக்கலாம்.

ஆகவே, 1 நிமிடத்துக்கு 208 போட்டோக்களை துல்லியமாக எடுக்கக்கூடியது. அதேபோல சினிமாடிக் பொக்கெ அல்கோரிதம் (Cinematic Bokeh Algorithm) கொண்டிருப்பதால், சினிமா தரத்தில் போர்ட்ராய்டு போட்டோக்களை கொடுக்கக்கூடியது. இந்த சோனி சென்சாரோடு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட்டும் ரியல்மி 12 பிளஸ் போனில் வருகிறது.

SONY கேமரா.. CINE பொக்கெ.. OIS சப்போர்ட்.. 24GB ரேம்.. எந்த மாடல்?

இந்த போன் வரும் மார்ச் 6ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சோனி சென்சார், ஓஐஎஸ் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் லெதர் பேக் பேனல் டிசைன் ஆகியவை தவிர மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மார்கெட் வட்டாரங்களில் கசிந்த பீச்சர்களை இப்போது பார்ப்போம்.

ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள் (Realme 12 Plus Specifications): இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7050 6nm SoC) சிப்செட் வருகிறது.

24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது.வேகன் லெதர் (Vegan Leather) பேனல் டிசைனில் கிரீன் (Green) மற்றும் பெய்ஜ் (Beige) கலரில் வெளியாக இருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், சிங்கிள் போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. டைப்-சி ஆடியோ கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த போனின் ஆரம்ப விலை ரூ.18,000 முதல் ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரியல்மி 12 பிளஸ் போனானது, மார்ச் 6ஆம் தேதிக்கு முன்னதாகவே, மலேசிய மார்கெட்டில் பிப்ரவரி 29ஆம் தேதி வெளியாகிறது. அப்போது, வி௦லை விவரங்கள் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Realme 12 Plus 5G With Sony Camera To Launch in India on March 6 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X