Home
Mobile

ஃபர்ஸ் டைம்.. ரூ.20,000 போதும்.. SONY எல்ஒய்டி 600 சென்சார்.. VC கூலிங் சிஸ்டம்.. RAIN டச்.. எந்த மாடல்?

இந்தியாவில் முதல்முறையாக ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus) போன் வெளியாகிறது. இந்த போனோடு, ரியல்மி 12 போனின் ரேம், கலர், விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.

ரியல்மி 12, 12 பிளஸ் விலை (Realme 12, 12 Plus Price): ரியல்மி 12 போனில் ட்விலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) ஆகிய 2 கலர்கள் வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது.

SONY எல்ஒய்டி 600 சென்சார்.. VC கூலிங் சிஸ்டம்.. RAIN டச்.. எந்த போன்?

ரியல்மி 12 பிளஸ் போனில் நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige) மற்றும் பியனீர் கிரீன் (Pioneer Green) ஆகிய 2 கலர்கள் வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,000க்குள் இருக்கும்.

ரியல்மி 12, 12 பிளஸ் அம்சங்கள் (Realme 12, 12 Plus Specification): ரியல்மி 12 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எஸ்ஓசி (MediaTek Dimensity 6100+ SOC) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. பிரத்யேகமாக டைனாமிக் பட்டன் கொண்டிருக்கிறது. 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த அம்சங்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆனால், ரியல்மி 12 பிளஸ் போனின் குளோபல் வேரியண்ட் வெளியாகிவிட்டதால், அதன் முழு அம்சங்களும் கசிந்துவிட்டன. ஆகவே, அந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

SONY எல்ஒய்டி 600 சென்சார்.. VC கூலிங் சிஸ்டம்.. RAIN டச்.. எந்த போன்?

இந்த டிஸ்பிளேவில் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 5 (realme UI 5) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது.

மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கொண்டுள்ளது. இந்த ரியல்மி 12 பிளஸ் போனில் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சோனி சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-wide Camera) + 2 எம்பி மேக்ரோ கேமரா (Macro Camera) கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரியல்மி 12 சீரிஸ் போன்கள் நாளை (மார்ச் 6) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருகின்றன. இதில் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் வெளியாகும் முதல் போனாக ரியல்மி 12 பிளஸ் 5ஜி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Plus 5G With Dimensity 7050 Chip Under Rs 20000 To Launch on March 6 Sale From Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X