Home
Mobile

ஆர்டர்னு போட்ட இதான்.. ரூ.18,000 பட்ஜெட்ல 24GB ரேம்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மாடல்களின் மிகப்பெரும் வரவேற்புக்கு பிறகு அதைவிட கம்மியான பட்ஜெட்டில் ரியல்மி 12 சீரிஸ் போன்கள் களமிறங்க இருக்கின்றன. இதில் ரியல்மி 12 பிளஸ் போனின் கேமரா, பேட்டரி, டிசைன் மற்றும் வெளியீட்டு விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள் (Realme 12 Plus Specifications): இந்த ரியல்மி போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பிளாட் எட்ஜ் டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. யுஐ 5 (realme UI 5) சப்போர்ட் கொண்டுள்ளது.

ரூ.18,000 பட்ஜெட்ல 24GB ரேம்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே போன்!

ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கொடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) வருகிறது. அதேபோல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7050 6nm SoC) சிப்செட் வருகிறது. இதற்கு 12 ஓஎஸ் அப்கிரேட் வழங்கப்படுகிறது.

12 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனாமிக் ரேம் (Dyanamic RAM) வருகிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. சோனி எல்ஓய்டி 600 சென்சார் (Sony LYT 600) சென்சார் கொண்ட போட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது.

இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. இதுவொரு டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்ட மாடலாகும். வேகன் லெதர் (Vegan Leather) பேனல் டிசைன் கொண்டிருக்கிறது. அதோடு கிரீன் (Green) மற்றும் பெய்ஜ் (Beige) கலர் கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி 12 பிளஸ் போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த அம்சங்களை மட்டுமே ரியல்மி நிறுவனம், அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி 12 பிளஸ் போனானது, வரும் பிப்ரவரி 29ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

அதோடு ரியல்மி 12 (Realme 12) போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே, ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் (Realme 12 Pro Series) மாடல்களுக்கு, இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்ததால், இந்த போன்களும் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, ரியல்மி இந்தியா நிறுவனம், இந்த போனின் வெளியீட்டு ட்விட்டர் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதோடு சோனி சென்சார் கேமரா, 12 ஓஎஸ் அப்கிரேட், லெதர் பேனல் டிசைன், டிரிபிள் ரியர் கேமரா ஆகிய பீச்சர்களை உறுதி செய்துள்ளது. இந்த சூழலில் ரியல்மி 12 பிளஸ் போனின் வெளியீட்டு தேதி கசிந்துள்ளது.

பிப்ரவரி 29ஆம் தேதி மலேசிய வெளியீட்டுக்கு பிறகு மார்ச் 6ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனோடு ரியல்மி 12 போனும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த பிளஸ் போனின் ஆரம்ப விலை ரூ.18,000 பட்ஜெட்டில் இருக்க இருக்குமென்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Realme 12 Plus 5G With 24GB RAM Tipped To Launch on March 6 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X