இந்தா வெச்சிக்கோ.. அப்படிவொரு பட்ஜெட்ல SONY கேமரா.. 24GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. VC சிஸ்டம்.. எந்த மாடல்?
கேமரா, ரேம், பேட்டரி போன்ற மொத்த அம்சங்களிலும் 'அள்ளிக்கோங்க' என்று சொல்லும் அளவுக்கு சோனி கேமரா, 24 ஜிபி ரேம், கூலிங் சிஸ்டம் கொண்ட பேட்டரி போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus) களமிறங்கி இருக்கிறது.
ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள் (Realme 12 Plus Specification): இந்த ரியல்மியில் 6.7 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) பேனல் மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 12 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5 (realme UI 5) சப்போர்ட் வருகிறது.
மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் கொண்டுள்ளது. பட்ஜெட்டிலும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-wide Camera) + 2 எம்பி மேக்ரோ கேமரா (Macro Camera) கொண்டுள்ளது. இந்த மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வரகிறது. நைட் மோட் (Night Mode), போட்டோ மோட் (Photo Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), பனோராமிக் வியூ (Panoramic View) பீச்சர்கள் கொண்டிருக்கிறது.

16 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி 12 பிளஸ் போனில் 5000mAh பேட்டரி வருகிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மாடவில் ஹீட் கன்ட்ரோல் பக்காவாக இருக்கும்.
இந்த பேட்டரி உடன் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல ஸ்லிம் டிசைனில் 7.87 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ரியல்மி 12 பிளஸ் வேரியண்ட்டில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த மாடலில் பியனீர் கிரீன் (Pioneer Green) மற்றும் நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige) ஆகிய 2 கலர்கள் வருகின்றன. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,090ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, மலோசியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
மார்ச் 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் மற்றும் சோனி எல்ஒய்டி 600 சென்சார் வருவது உறுதியாகி இருக்கிறது. இங்கு தள்ளுபடியோடு ரூ.25000 பட்ஜெட்டில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications








