Home
Mobile

ஆரம்பமே ஆஃபர்.. சோனி கேமரா.. 67W சார்ஜிங்.. ரியல்மி 12 பிளஸ் 5ஜி அறிமுகம்.. என்ன விலை?

ரியல்மி நிறுவனம் அசத்தலான ரியல்மி 12 5ஜி மற்றும் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.

குறிப்பாக ரியல்மி 12 பிளஸ் 5ஜி போன் ஆனது சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆரம்பமே ஆஃபர்.. ரியல்மி 12 பிளஸ் 5ஜி அறிமுகம்.. என்ன விலை?

ரியல்மி 12 பிளஸ் 5ஜி அம்சங்கள் (realme 12+ specifications) : 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display)வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இதில் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ரியல்மி யுஐ 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வழங்கப்பட்டுள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட், வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது.

ஆரம்பமே ஆஃபர்.. ரியல்மி 12 பிளஸ் 5ஜி அறிமுகம்.. என்ன விலை?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 பிளஸ் 5ஜி போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. இந்த போனின் முதல் விற்பனை இன்று மதியம் 3 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் தொடங்குகிறது.

அதேசமயம் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். பின்பு இந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை வாங்கினால் ரியல்மி பட்ஸ் டி300 (realme Buds T300) இலவசமாகக் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Plus 5G launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X