வெளுத்து கட்டுது சேல்.. ரூ.14,899 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப 3X இன்-சென்சார் ஜூமிங் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், சாம்சங் ஐசோசெல் எச்எம்6 சென்சார், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி 12 5ஜி (Realme 12 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எந்தவொரு பேங்க் டிஸ்கவுண்ட்டும் இல்லாமலேயே ரூ.3,100 விலை குறைப்பில் கிடைக்கிறது. இந்த ரியல்மி 12 5ஜி போனின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 12 5ஜி அமேசான் விற்பனை (Realme 12 5G Amazon Sale): இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் இருந்தது. ஆனால், அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டானது, இப்போது ரூ.14,899 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.3,100 விலை குறைப்பு போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்ய வேண்டியது கிடையாது. மார்கெட் விலையில் இருந்து நேரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை எதிர்பார்க்கலாம். இருப்பினும், கேமரா பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படியே இருக்கின்றன.
ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (Realme 12 5G Specifications): இந்த ரியல்மி போனில் சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (SAMSUNG ISOCELL HM6) சென்சார் மட்டுமல்லாமல், 3X இன்-சென்சார் ஜூமிங் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. சூப்பர் குரூப் மோட் (Super Group Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. ஒரு வருட பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே எதிர்பார்க்க முடிகிறது. இருப்பினும், ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் டைனாமிக் பட்டன் (Dynamic Button) பீச்சர்கள் கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கிறது.
இதுபோக 2 டிபி மெமரி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல இந்த ரியல்மி 12 5ஜி ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொடுக்கிறது.
டிஸ்பிளேவில் அமோலெட் பேனல் மட்டுமில்லை. மற்றபடி ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 950 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் ஸ்கிரீன் கலர் உள்ளது.
இந்த ரியல்மி 12 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளேவுக்கு பதிலாக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் வருகிறது. பட்ஜெட்டைவிட கூடுதலாக பிரீமியம் லுக் கொடுக்கும்படி ட்வைலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








