ஆளுக்கு 1 வாங்குவீங்க.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் அட்டகாசமான ரியல்மி 12 5ஜி மற்றும் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளன.
குறிப்பாக ரியல்மி 12 5ஜி போன் ஆனது 108எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (realme 12 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 680 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இதில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடுக்க முடியும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட், வைஃபை 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரியல்மி 12 5ஜி போன் வெளிவந்துள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 5ஜி போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. இந்த போனின் முதல் விற்பனை இன்று மதியம் 3 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் தொடங்குகிறது.
அதேசமயம் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரியல்மி 12 5ஜி போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். பின்பு நோ காஸ்ட் இஎம்ஐ, இலவச இயர்பட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த ரியல்மி 12 5ஜி போனுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








