அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 108MP கேமரா.. 256GB மெமரி.. மார்ச் 6-ல் வரும் ரியல்மி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது அசத்தலான ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
வரும் மார்ச் 6-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனுடன் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கூட அறிமுகம் செய்யப்படும். மேலும் ரியல்மி.காம், பிளிப்கார்ட் போன்ற ஸ்டோர்களில் மார்ச் 5-ம் தேதி இரவு 11.59-க்கு இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர நோ காஸ்ட் இஎம்ஐ முறையைப் பயன்படுத்திக் கூட இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.
ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (Realme 12 5G specifications): ஆன்லைனில் வெளியான தகவலின்படி, தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதேபோல் நைட் ஐ என்ஜின் (NightEye Engine), சினிமாடிக் போர்ட்ரெய்ட் அல்காரிதம் (Cinematic Portrait Algorithm), 3X இன்-சென்சார் ஜூம் (3x In-sensor Zoom) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளது. இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.23,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








