Home
Mobile

தீ பறக்கும் ஆர்டர்கள்.. ரூ.13,999 போதும்.. 64MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மலிவான பட்ஜெட்டில் 64 எம்பி கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ரியல்மி 11 எக்ஸ் (Realme 11x) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த போனின் மற்ற அம்சங்களும், பிரீமியம் டிசைனும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இப்போது, அறிமுக சலுகையாக ரூ.1,000 உடனடி தள்ளுபடி வேறு கிடைக்கிறது. இதனால், ரியல்மி பிரியர்கள் ஆர்டருக்கு மேல் ஆர்டர் போட்டு அசத்தி வருகின்றனர். இந்த போனின் விலை என்ன? எங்கு விற்பனைக்கு கிடைக்கும்? முழு அம்சங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரியல்மி 11 எக்ஸ் அம்சங்கள் (Realme 11x Specifications): இந்த ரியல்மி 11 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது.

ரூ.13999 போதும்! 64MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவில் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி 11 எக்ஸ் மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) வருகிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டைப் - சி சார்ஜிங் போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரியல்மி மாடலின் எடை 190 கிராம் உள்ளது. மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பர்பிள் டவுன் (Purple Dawn) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ரியல்மி 11 எக்ஸ் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இந்த போன் இன்று (ஆகஸ்ட் 30) முதல் பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி.காம் (realme.com) ஆகிய தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

அதோடு ரியல்மி ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்கிக்கொள்ள முடியும். இந்த மாடலுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எச்டிஃஎப்சி (HDFC) மற்றும் எஸ்பிஐ (SBI) கார்டுகளை பயன்படுத்தி இந்த ரியல்மி மாடலை வாங்கினால் தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த தள்ளுபடி ஆஃப்லைன் ஸ்டோர்களுக்கும் பொருத்தும். பக்காவான டிசைன், கேமரா, பேட்டரி கொண்ட போன் கம்மி விலையில் வேண்டுமானால், இந்த போனை தேர்வு செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11x 5G With 5000mAh Battery Goes Sale On Flipkart in India Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X