Home
Mobile

ஆர்டருக்கு மேல் ஆர்டர்.. மார்கெட்டே அதிருது.. வெறும் ரூ.13,999 பட்ஜெட்.. இப்படிவொரு போன் வந்தா யாருவிடுவா?

வெறும் ரூ.13,999 பட்ஜெட்டில் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் கிரிஸ்டல் கிளாஸ் பேனல் டிசைனில் ரியல்மி 11 எக்ஸ் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை ரியல்மியின் 5ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு மட்டுமே வழங்கப்படுகிறது.

ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி 11 எக்ஸ் (Realme 11x) போன், ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே, இந்த போனின் அம்சங்கள் பெரிதும் பேசப்பட்டன. இவ்வளவு மலிவான விலைக்கு, பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்டிருப்பதால், எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே அதிகரித்தது. இந்த சூழலில், அந்த போன் தள்ளுபடி விலையோடு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது.

ஆர்டருக்கு மேல் ஆர்டர்! ரூ.13,999க்கு இப்படிவொரு போன் வந்தா யாருவிடுவா

ரியல்மி 11 எக்ஸ் அம்சங்கள் (Realme 11x Specifications): இந்த ரியல்மி மாடல் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 2 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் கொண்டுள்ளது.

அதோடு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) மற்றும் ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அதன்படி 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ரியல்மி 11 எக்ஸ் போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) அம்சங்கள் வருகின்றன.

அதோடு ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 802 (Wi-Fi 802), டைப் - சி சார்ஜிங் போர்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் 190 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த ரியல்மி 11 எக்ஸ் போன் பர்பிள் டவுன் (Purple Dawn) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ரியல்மி 5ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 25) பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி.காம் (realme.com) தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எச்டிஃஎப்சி (HDFC) மற்றும் எஸ்பிஐ (SBI) கார்டுகளை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். மலிவான விலையில் பிரமாதமான டிசைன் மற்றும் அம்சங்களை கொண்ட போன் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த ரியல்மி 11 எக்ஸ் போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11x 5G Available On Flipkart in in India Via 5th Anniversary Sale Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X