Home
Mobile

மிரளும் விற்பனை.. வெறும் ரூ.22499க்கு 100MP கேமரா.. 67W சார்ஜிங்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் மிகவும் கம்மியான பட்ஜெட்டில் 100எம்பி கேமரா, கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் வெளியாகிய ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் (Realme 11 Pro Series) போன்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

ரியல்மி 11 ப்ரோ அம்சங்கள் (Realme 11 Pro Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளேவாகும். இதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1260Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.22499க்கு 100MP கேமரா.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு, 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ரியல்மி போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் பிரம்மாண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது.

ஆகவே, 100 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவானது, ஓஐஎஸ் ப்ரோலைட் கேமரா (OIS ProLight Camera) மாடலாகும். இதில் ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), சூப்பர் நைட் ஸ்கேப் (Super NightScape), பேனோ (Pano), போக்கெ (Bokeh), சூப்பர் குரூப் போர்ட்ராய்டு (Super Group Portrait) போன்ற பல்வேறு மோட்கள் வருகின்றன.

அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் டூயல் வியூ வீடியோ (Dual-view Video), ஸ்டார்ரி டைம் லேப்ஸ் (Starry time-lapse Video), ஏஐ வீடியோ டிராக்கிங் (AI Video Tracking) போன்ற மோட்கள் வருகின்றன. இரண்டு கேமராவிலும் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்துகொள்ள முடியும். இந்த மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

மேலும், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் ஆஸ்ட்ரல் பிளாக் (Astral Black), ஒயாசிஸ் கிரீன் (Oasis Green) மற்றும் சன்ரைஸ் பீஜ் (Sunrise Beige) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் ரூ.24,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ. 27,999ஆகவும் இருக்கிறது. இந்த போனின் ப்ரோ பிளஸ் மாடலில் 200 எம்பி கேமரா வருவதால், அதன் விலை சற்று கூடுதலாக இருக்கிறது.

ஆகவே, அந்த போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது, ரூ.27,999க்கும், 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.29,999க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரிஸ் போனின் ஆரம்ப விலையானது, பிளிப்கார்ட்டில் ஆஃபருடன் வெறும் ரூ.22,499க்கு கிடைக்கிறது.

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் 100 எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கிடைப்பதால் விற்பனையில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், இப்போது வரை சுமார் 1,00,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ரியல்மி நிறுவனம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 Pro Series With 12GB RAM, 5000mAh Battery 1 Million Units Sold in India Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X