இந்த போனில் நிலாவையே ஜூம் செய்யலாம்.. Moon Mode உடன் மே மாதம் வருகிறது Realme 11 Pro Plus
கேமரா பிரியர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான அம்சங்களை கொண்ட ரியல்மி 11 புரோ பிளஸ் (Realme 11 Pro Plus) மாடல் ஸ்மார்ட்போன் மே மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருப்பதால், விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மிட்-ரேன்ஞ் விலையிலேயே வெளியாக உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் 11 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இந்த போன் சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra), சியோமி 12 அல்ட்ரா ( Xiaomi 13 Ultra ) போன்களுக்கு இணையான அம்சங்களை கொண்டுள்ளது.

இதுவரையில் கேமரா என்றாலே ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 14 புரோ மேக்ஸ் ( iPhone 14 Pro Max ) மற்றும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ஆகிய இரண்டுமே முன்னணியில் உள்ளன. இதன் காரணமாக இவற்றிற்கு இணையான அம்சங்களை கொண்ட போன்களை தயாரிப்பதில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முழு ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், ரியல்மி 11 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால், சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா போனில் உள்ள ஸ்பேஸ் ஜூம் (Space Zoom) அம்சத்தை போலவே, ரியல்மி 11 புரோ பிளஸ் போனில் மூன் மோட் ( Moon Mode ) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோடை பயன்படுத்தி ரியல்மி 11 புரோ பிளஸ் கேமரா மூலம் நிலவை ஜூம் செய்து தரமான போட்டோவை எடுக்கலாம் என்று கூறப்படுறது.
ரியல்மி 11 புரோ பிளஸ் அம்சங்கள்: ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி அமோலேட் (Full HD AMOLED) டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதற்காக 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மீடியாடெக் டைமென்சிட்டி 1200 எம்டி6893 சிப்செட் ( MediaTek Dimensity 1200 MT6893 Chipset) உள்ளது. அதே போல 200 எம்பி மெயின் கேமரா டிரிபிள்-கேமரா செட்-அப் உடன் வருகிறது.
அதில் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 எம்பி லென்ஸ் கேமரா அடங்கும். அதோடு ஸ்பேஸ் ஜூம் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமே ரியல்மி 11 புரோ பிளஸ் போனின் பிரதான விளம்பர யுக்தியாக உள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal Storage) உள்ளது.
5000 எம்ஏஹெச் பேட்டரி 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விலை ரூ. 34,990 ஆக இருக்க வாய்ப்புள்ளது. பிளாக் (Black), கோல்டு (Gold) ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது. ரூ.35 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாக உள்ளதால், இந்திய மார்க்கெட்டில் ரியல்மி 11 புரோ பிளஸ் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








