Home
Mobile

வச்சி செஞ்சிடுச்சு.. இவ்ளோ கம்மி விலைக்கு 200MP கேமரா.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்-ஆ.. வாய்பிளக்க வைக்கும் Realme!

என்னது.. இவ்வளவு மலிவான விலைக்கு 200MP கேமராவா.. கூடவே 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியா.. என்று கேட்பவர்களை வாய்பிளக்க வைக்கும்படி, ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro Plus 5G) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து ரியல்மி 11 (Realme 11) மற்றும் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) என மொத்தம் 3 புதிய மாடல்கள் ரியல்மி 11 சீரீஸின் (Realme 11 Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 போன்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

Realme 11 சீரீஸின் கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ரியல்மி 11 முக்கிய அம்சங்கள்: இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.43-இன்ச் ஃபுல்-எச்டி+ சாம்சங் அமோஎல்இடி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 5ஜி சிப்செட், 64எம்பி ஆம்னிவிஷன் OV64B40 சென்சார் + 2எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.

மேலும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 5,000எம்ஏஎச் பேட்டரியம் உள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 29 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்ப்ளேக்களுடன் வருகின்றன. மேலும் இரண்டுமே ஆக்டா-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். இரண்டு போன்களுக்கும் இடையேயான வேறுபாடு கேமராக்களில் பிரதிபலிக்கும்.

ரியல்மி 11 ப்ரோ மாடலானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 100எம்பி மெயின் கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. மறுகையில் உள்ள ப்ரோ பிளஸ் மாடலில் "சூப்பர் ஓஐஎஸ்" உடனான 200எம்பி சாம்சங் எச்பி3 சென்சார் உள்ளது.

இதனுடன் 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராவும் உள்ளன. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இரண்டுமே 5,000mAh பேட்டரியுடன் வருகின்றன. அனால் ப்ரோ மாடலானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரக்கிறது; அதே நேரத்தில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரக்கிறது.

ரியல்மி 11 விலை: சீனாவில் ரியல்மி 11 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். அதன் விலை சுமார் ரூ.18,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 11 ப்ரோ விலை: சீனாவில் இது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி. இந்த மூன்றும் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.20,000, ரூ.24,000 மற்றும் ரூ. 26,000 என்கிற விலை நிர்ணயங்களை பெற்றுள்ளன.

ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விலை: இதுவும் கூட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை தோராயமாக ரூ.24,000 என்றும், 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷனின் விலை சுமார் ரூ.27,000 என்றும் மற்றும் 12ஜிபி + 11டிபி ஆப்ஷனின் விலை தோராயமாக ரூ.30,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 11 சீரிஸின் கீழ் இருக்கும் 2 ப்ரோ மாடல்களுமே வருகிற மே 15 முதல் சீனாவில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள வெண்ணிலா மாடலான ரியல்மி 11 ஆனது ஜூன் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகமாகும். இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 Pro Plus 5G with 200MP Camera 100W Charging Launched Alongside Realme 11 and Realme 11 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X