Home
Mobile

DSLR கேமராவுக்கு குட்பை! 200எம்பி கேமரா கொண்ட ரியல்மி போனின் அறிமுக தேதி வெளியானது.!

ரியல்மி நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றம் அதிநவீன கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் மே 10-ம் தேதி ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தரமான கேமரா வசதியுடன் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

200எம்பி கேமரா கொண்ட ரியல்மி போனின் அறிமுக தேதி வெளியானது.!

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 7050 சிப்செட் உடன் Mali-G68 MC4 ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி போன் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பின்னுக்கு தள்ளிவிடும்.

புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸமார்ட்போன்.

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இருந்தபோதிலும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 Pro Plus 5G smartphone with 200MP rear camera to be launched on May 10 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X