200MP கேமரா.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. Realme-யின் ரேஞ்ஜை மாற்றப்போகும் 2 புதிய போன்கள்!
ஏற்கனவே இந்திய மொபைல் போன் சந்தையில் (Indian Mobile Phone Market) சக்கை போடு போட்டு கொண்டிஇருக்கும் ரியல்மி (Realme) நிறுவனமானது, அதன் 2 புதிய ஸ்மார்ட்போன்களை வைத்து அதன் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடுவது போல் தெரிகிறது.
நாம் இங்கே பேசுவது ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இந்த இரண்டுமே விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் சாம்சங், சியோமி, ஒன்பிளஸின் பல போன்களை தூக்கி சாப்பிடும் என்பது போல் தெரிகிறது.

இந்த போன்கள் என்னனென்ன அம்சங்களை பேக் செய்யும்? ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு மாடல்களுமே டைமென்சிட்டி 1080 சிப்செட் (Dimensity 1080 Chipset) மூலம் இயக்கப்படலாம்.
ரியல்மி 11 சீரீஸின் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். இருப்பினும் ரியல்மி 10 ப்ரோவானது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். மறுகையில் உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரும்.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே 16எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இருப்பினும் ரியர் கேமரா செட்டப்பில், இந்த இரண்டு போன்களுக்கும் இடையே பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ரியல்மி 11 ப்ரோ மாடலானது 100எம்பி மெயின் கேமரா + 2எம்பி கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்யலாம். மறுகையில் உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி சப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.
எப்போது அறிமுகமாகும்? ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே பிஐஎஸ் (BIS - Bureau of Indian Standards) சான்றிதழை பெற்றுவிட்டதால், அவைகள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதலில் சீனாவில் தான் வெளியாகும்; பின்னரே இந்தியாவிற்கு வரும்.
விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ரியல்மி 11 ப்ரோ மாடலானது ரூ.28,999 க்கும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.34,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலைகள் உண்மையாகும் பட்சத்தில், பேச்சுக்கு மட்டுமல்ல.. உண்மையிலேயே ரியல்மி நிறுவனத்தின் ரேஞ்சே மாறிவிடும்!


Click it and Unblock the Notifications








