Home
Mobile

கண்ணை மூடிக்கிட்டு வாங்கும் விலை.. Realme 11 Pro, Realme 11 Pro+ இந்தியாவில் அறிமுகம்.. ஜூன் 15 முதல் விற்பனை!

கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) ஸ்மார்ட்போன்கள், இன்று (ஜூன் 8) இந்தியாவில் அறிமுகமாகின. இவ்விரு போன்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

வருகிற ஜூன் 15ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ள ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுற்குமான வேறுபாடுகளை கேமராக்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கில் காண முடிகிறது.

Realme 11 Pro, Realme 11 Pro Plus இந்தியாவில் அறிமுகம்.!

பொதுவான அம்சங்கள் VS வேறுபடும் அம்சங்கள்: ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே 6.7-இன்ச் அளவிலான ஃபுல்எச்டி+ கர்வ்டு டிஸ்பிளேக்களை (FHD+ Curved Display) கொண்டுள்ளன. மேலும் இந்த 2 போன்களுமே ஆக்டா-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸரை (Mediatek Dimesity 7050 SoC) பேக் செய்கின்றன.

கேமராக்களில் உள்ள வேறுபாடுகளை பொறுத்தவரை, ரியல்மி 11 ப்ரோவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 100எம்பி மெயின் கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

மறுகையில் உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது சூப்பர் ஓஐஎஸ் (Super OIS) உடனான 200எம்பி சாம்சங் எச்பி3 சென்சாரை மெயின் கேமராவாக கொண்டுள்ளது. உடன் 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் இது 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

கடைசியாக ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே 5,000mAh பேட்டரியுடன் வருகின்றன. ஆனால் ரியல்மி 11 ப்ரோ மாடலானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரக்கிறது; மறுகையில் உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரக்கிறது.

ரியல்மி 11 ப்ரோ விலை: இது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி. இந்த மூன்றும் முறையே ரூ.23,999, ரூ.24,999 மற்றும் ரூ. 27,999 என்கிற விலை நிர்ணயங்களை பெற்றுள்ளன.

ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விலை: இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.27,999 என்றும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.29,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஜூன் 15 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Realme 11 Pro 5G and Realme 11 Pro Plus 5G Launched in India Price Specifications Sale Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X