ரூ.12,000 போதுமா? 108எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. 67W சூப்பர்வூக் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் ரியல்மி (Realme) நிறுவனம், பட்ஜெட் விலை போன்களை அடுத்தடுத்து களமிறக்கி தனி இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில், ரியல்மி சி53 போனானது, 108 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி என்று பக்காவான அம்சங்களுடன் அறிமுகமானது.
இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை வெறும் ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. இதுவே ரியல்மி பிரியர்களுக்கு மிகப்பெரும் ட்ரீட்டாக இருந்த நிலையில், இப்போது ரியல்மி 11 (Realme 11) போனுடன் மீண்டும் கம்மி பட்ஜெட்டில் அசத்த வருகிறது. இந்த போனின் அம்சங்கள் பின்னிப்பெடல் எடுக்கிறது. இதன் போனின் முழு அம்சங்கள், வெளியீட்டு தேதி, விலை குறித்த தகவல்கள் பின்வருமாறு.

ரியல்மி 11 அம்சங்கள் (Realme 11 Specifications): இந்த ரியல்மி போன் 6.4 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. இந்த போன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் 108 எம்பி மோட், எச்டிஆர் சப்போர்ட், போக்கெ எஃபெக்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜேக், ப்ளூடூத் 5.3, டூயல் நானோ சிம் கார்டு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வருகின்றன.
பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலை குறித்த விவரங்கள் வரும் ஜூலை 31ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி 10 போன் ரூ.12,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது.
ஆகவே, இந்த போன் ரூ.12,000 பட்ஜெட்டுக்குள் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








