Home
Mobile

அடிச்சி பேசும் பட்ஜெட்.. 108MP டபுள் லீப் கேமரா.. 67W சூப்பர்வூக் சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் கிரிஸ்டல் கிளியர் போட்டோஸ் கொடுக்கும் 108எம்பி டபுள் லீப் கேமரா, 16ஜிபி ரேம், 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி என்று வாரி தூக்கும் அம்சங்களுடன் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) வரவிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரியல்மி 11 5ஜி அம்சங்கள் (Realme 11 5G Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), ரியல்மி யூஐ 4.0 (UI 4.0 OS) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் வருகிறது.

108MP டபுள்லீப் கேமரா..  67W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

அதோடு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.4 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. இப்போது வரும் பெரும்பாலான போன்களில் கொடுக்கப்படும் விர்ச்சுவல் ரேம் வசதி இந்த போனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு வருகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.

இதுவொரு டபுள் லீப் (Double Leap) டிசைன் மாடலாகும். அதில், 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்ட் கேமரா வருகிறது. அதோடு பில்-ஷேப்ட் (Pill Shaped LED) எல்இடி பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. முக்கிய அம்சமாக 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

அதோடு வழக்கமாக போன்களில் கொடுக்கப்படும், சைடு மவுண்டென்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி போர்ட், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, டூயல் நானோ சிம் கார்டு போர்ட், எஸ்டி கார்டு போர்ட், என்எஃப்சி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போன் பேட்டரியுடன் சேர்த்து 190 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த போன் டேய்பிரேக் கோல்டு (Daybreak Gold) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் தைவானில் ஆகஸ்ட் 3ஆம் தேதியே விற்பனைக்கு வந்துவிட்டது. அங்கு, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,481ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நியாயமான விலையில் பிரம்மாண்ட கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி கொண்ட போனாக இருப்பதால், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெகுவாக காத்துக் கொண்டிருந்தனர். இந்த வேளையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்தன.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ரியல்மி இந்தியா நிறுவனம் தனது ட்விட்டரில் ரியல்மி 11 5ஜி போன் குறித்த டீசரை வெளியிட்டு, மேலும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 5G With 16GB RAM, 108MP Dual Camera Launch Soon in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X