அழகு அள்ளுதே.. 108எம்பி கேமரா.. 5000 எம்ஏஎச் பேட்டரி.. அறிமுகமானது புதிய Realme போன்.! என்ன மாடல்?
ரியல்மி நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக சியோமி, சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களை விட கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்கிறது ரியல்மி. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ரியல்மி நிறுவனம் அசத்தலான ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரியல்மி 11 5ஜி (Realme 11 5G)எனும் ஸ்மார்ட்போனை தான் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Samsung AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் கோல்ட் மற்றும் மூன் நைட் டார்க் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC)ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் ரியல்மி 11 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை NTD 8990 (இந்திய மதிப்பில் ரூ.23,500). இந்த போன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தைவானில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்திய சந்தையில் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








