Home
Mobile

தூக்கி பாக்கெட்டில் போடும் விலை.. 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் விற்பனையாகும் பட்ஜெட் விலை போன்களை தூக்கிசாப்பிடும் விதமாக 108எம்பி டபுள் லீப் (Double Leap) கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போன் வெளியாக இருக்கிறது.

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் கவரும் விதமாக ரியல்மி 11 5ஜி போனின் கேமரா அம்சங்கள் இருக்கின்றன. இந்த போனின் அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகிவரும் நிலையில், இப்போது கேமரா மற்றும் பேட்டரி அம்சங்களை ரியல்மி நிறுவனமே உறுதிப்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட அம்சங்கள் இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் கொடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த போனில், எச்எம்6 (HM6) சென்சாருடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி போர்ட்ராய்ட் கேமரா (Portrait Camera) வருகிறது. இந்த கேமரா 3x ஜூமிங் மற்றும் ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த எச்எம்6 கேமரா சென்சார் பிக்சல்கள் உடையாமலும், கிரிஸ்டல் கிளியர் போட்டோ அனுபவத்தையும் கொடுக்கும்.

அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனின் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரியல்மி 11 5ஜி அம்சங்கள் (Realme 11 5G Specifications): இந்த ரியல்மி போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.4 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் இருக்கிறது.

அதோடு ரியல்மி யுஐ 4.0 (UI 4.0 OS) ஓஎஸ் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு வரவிருக்கிறது.

அதோடு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட்டும் வருகிறது. அதுமட்டுமல்லாமல், சைடு மவுண்டென்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி போர்ட், டூயல் நானோ சிம் போர்ட் மற்றும் எஸ்டி கார்டு போர்ட் வருகிறது.

மேலும், ப்ளூடூத் 5.3, வைபை 802 மற்றும் என்எஃப்சி கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போன் மொத்தமாக 190 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த ரியல்மி போன் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டேய்பிரேக் கோல்டு (Daybreak Gold) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இந்த போன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில், இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று ரியல்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, ரியல்மி இந்தியா நிறுவனம் தனது ட்விட்டரில் ரியல்மி 11 5ஜி போனின் அம்சங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையிலேயே, இன்று (ஆகஸ்ட் 14) பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட் விலையில் பிரம்மாண்ட கேமரா கொண்ட போனாக ரியல்மி 11 5ஜி இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 5G With 108MP Camera, 67W Charging Confirmed Check Specifications Price Launch Timeline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X