Home
Mobile

வாரி தூக்கும் பட்ஜெட்.. பிசிறு தட்டும் 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி வேற.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும், தட்டித்தூக்கும் விதமாக ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போனின் அம்சங்கள் இருக்கிறது. இந்த போனின் அறிமுக தேதி, விலை மற்றும் முழு அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ.

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், அந்த விலையில் நல்ல நல்ல அம்சங்களுடன் புதுப்புது போன்களை ரியல்மி நிறுவனம் களமிறக்கி வருகிறது. இப்போது, பிசிறு தட்டும் 108 எம்பி கேமராவுடன், 16 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ரியல்மி 11 5ஜி போனை வெளியிட காத்திருக்கிறது.

பிசிறு தட்டும் 108MP கேமரா.. 16GB ரேம் வேற.. எந்த மாடல்?

ரியல்மி 11 5ஜி அம்சங்கள் (Realme 11 5G Specifications): இந்த ரியல்மி போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.4 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு இருக்கிறது.

அதோடு, 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யூஐ 4.0 (UI 4.0) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் வருகிறது.

அதோடு, ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, மொத்தமாக 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இந்த ரியல்மி 11 5ஜி போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்ட் கேமரா கொடுக்கப்பட்டடுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் கேமராவுக்கு பிறகு பிரம்மாண்ட அம்சமாக 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி போர்ட், டூயல் நானோ சிம் கார்டு மற்றும் எஸ்டி கார்டு போர்ட், என்எஃப்சி போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் எடை 190 கிராம் வருகிறது.

இந்த ரியல்மி 11 5ஜி போன் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டேய்பிரேக் கோல்டு (Daybreak Gold) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.23,481ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தைவானில் இன்று (ஆகஸ்ட் 3) விற்பனை தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்திய வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று பேசப்படுகிறது.

ஏனென்றால், இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ 5ஜி போனின் விலையே ரூ.23 ஆயிரம் பட்ஜெட்டில் தொடங்குகிறது. ஆகவே, ரூ.20,000 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி உடன் போன் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த ரியல்மி 11 5ஜி போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 5G With 108MP Camera, 16GB RAM India Launch Date Tipped Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X