Home
Mobile

ப்பா.. விலை இவ்ளோ கம்மியா இருக்கும்னு யாருமே நினைக்கல.. 2 தரமான Realme 5G போன்கள் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் 2 புதிய ஸ்மார்ட்போன்களாக ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11X 5G) மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

ரியல்மி 11 5ஜி அம்சங்கள்: இது 120Hz ரெப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ சாம்சங் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் உடனாக 8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டைனமிக் ரேம் விரிவாக்கம் (DRE) அம்சமும் உள்ளது. இதன்கீழ் போன் ஸ்டோரேஜை 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.

2 தரமான Realme 5G போன்கள் அறிமுகம்!

கேமராக்களை பொறுத்தவரை இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 108 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HM6 மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எஃப்/2.45 அபெக்ஷர்ரை கொண்ட 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 மூலம் இயங்குகிறது

256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 2டிபி வரை விரிவாக்கும் ஆதரவும் உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 17 நிமிடங்களில் 50% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்.

ரியல்மி 11எக்ஸ் 5ஜி அம்சங்கள்: இது ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது - 120Hz ரெப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ சாம்சங் AMOLED டிஸ்பிளே, 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 16ஜிபி வரையிலான டைனமிக் ரேம் விரிவாக்கம் (DRE) அம்சம், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 போன்றவைகளை கொண்டுள்ளது.

இவ்விரு போன்களுக்குமான வேறுபாடுகள் கேமரா செட்டப்பிலும், பேட்டரி டிபார்ட்மென்ட்டிலும் தான் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் கூட டூயல் ரியர் கேமரா செட்டப்பே உள்ளது. ஆனால் அதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் கூட ரியல்மி 11 5ஜி-ஐ போலவே 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இது 67W SuperVOOC சார்ஜிங்கிற்கு பதிலாக 33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெண்ணிலா மாடலின் சற்றே அம்சங்கள் குறைக்கப்பட்ட ஒரு வேரியண்ட் ஆக வந்துள்ளது.

ரியல்மி 11 5ஜி விலை: இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது க்ளோரி கோல்ட் மற்றும் க்ளோரி பிளாக் கலர் ஆப்ஷன்களில் ஆகஸ்ட் 29 முதல் விற்பனைக்கு வரும்.

ரியல்மி 11 5ஜி ப்ரீ-ஆர்டர்: இது ஆகஸ்ட் 23 அன்று மதியம் 1:15 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎச்பி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1,500 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக ரூ.1,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடியும் கிடைக்கும்.

ரியல்மி 11எக்ஸ் 5ஜி விலை: இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிட்நைட் பிளாக் மற்றும் பர்பில் டான் கலர் ஆப்ஷன்களில் ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்பெஷல் ஃபிளாஷ் விற்பனை: அறிமுகமான வேகத்திலேயே இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறப்பு ஃப்ளாஷ் விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎச்பி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளில் ரூ.1,500 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 5G Realme 11X 5G Launched in India Check Price Specifications Sale Date Pre Order Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X