Home
Mobile

ஆகஸ்ட் 23க்கு அப்புறம்.. இந்த போன் தான் டிரெண்ட்.. பட்ஜெட் விலையில் 108MP கேமரா, 8GB ரேம், 5000mAh பேட்டரி!

வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று "பக்காவான" பட்ஜெட் விலையில் "பரபரப்பான" அம்சங்களுடன் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11X 5G) போன்களை பற்றித்தான். இவ்விரு 5ஜி போன்களும் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று ரியல்மி இந்தியாவால் (Realme India) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23க்கு அப்புறம்.. இந்த போன் தான் டிரெண்ட்!

சுவாரசியமாக ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், அதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் எங்களிடம் ஏற்கனவே உள்ளன. மறுகையில் உள்ள ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஆனது ரியல்மி 11 5ஜி-யில் உள்ள பெரும்பாலான அம்சங்களை பேக் செய்யலாம் மற்றும் இருப்பதிலேயே மலிவான மாடலாகவும் இருக்கலாம்.

பெயர்கள் குறிப்பிடுவது போலவே இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ரியல்மி 11 சீரீஸின் கீழ் வரும். நினைவூட்டும் வண்ணம், கடந்த மே மாத தொடக்கத்தில் ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro Plus 5G) அறிமுகம் செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகவே - இன்னும் மலிவான விலையில் - ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வருகிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே செல்பீ கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். பேக் பேனலில் பளபளப்பான பூச்சு மற்றும் மேல் இடதுபுறத்தில் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான ஒரு பெரிய வட்ட வடிவிலான கேமரா செட்டப் இடம்பெறும்.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108-மெகாபிக்சல் மெயின் கேமரா + 2-எம்பி டெப்த் சென்சார் உடன் வரும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கும். மறுகையில் உள்ள ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 64எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் ரியர் கேமராவையும், 8எம்பி செல்பீ கேமராவையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை, ரியல்மி 11 5ஜி ஆனது 67W சூப்பர்வூக் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ரியல்மி 11எக்ஸ் 5ஜி மாடலானது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம் மற்றும் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த 2 ரியல்மி ஸ்மார்ட்போன்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ (2400 x 1080 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இதுதவிர்த்து ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்றவைகளையும் கொண்டிருக்கும் .

ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்களில் வெளியாகலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை நிர்ணயங்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும்.

ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகள் ஆகஸ்ட் 23 அன்று தொடங்கி ஆகஸ்ட் 28 வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, பேஸிக் வேரியண்ட்டை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.1299 மதிப்புள்ள ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2 நியோ இலவசமாக கிடைக்கும். ரியல்மி 11எக்ஸ் 5ஜி-ஐ ப்ரீ-ஆர்டர் செய்தால் ரூ.599 மதிப்புள்ள ரியல்மிபட்ஸ் 2 இலவசமாக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 5G and Realme 11X 5G India Launch Confirmed on August 23 Confirmed Specs Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X