Home
Mobile

வாரே வா.. 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி 5G போன் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் இந்தோனேசியாவில் புதிய ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

இப்போது புதிய ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய ரியல்மி 5G போன் அறிமுகம்.!

இந்த ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய ரியல்மி 5G போன் அறிமுகம்.!

அதேபோல் இந்த புதிய ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போன் குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளது. அதாவது 187 கிராம் எடை கொண்டுள்ளது இந்த ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய ரியல்மி 5G போன் அறிமுகம்.!

4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை THB 6,999 (இந்திய மதிப்பில் ரூ.16,000). பின்பு இதன் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை THB 8,999 (இந்திய மதிப்பில் ரூ.21,000). குறிப்பாக எலக்ட்ரிக் பிளாக் மற்றும் டாஷ் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ரியல்மி 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 10T 5G With 5000mAh battery Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X